search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள்"

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.

    இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு  ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×